விசை (force) என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
விசைகள் பொதுவாக இழுவை அல்லது தள்ளு விசைகளாகக் கருதப்படுகிறது. இது புவியீர்ப்பு, காந்தவிசை, அல்லது ஒரு திணிவை ஆர்முடுக்கக் கூடிய ஏதாவதொரு செயற்பாடுகளால் தோற்றுவிக்கலாம்.
†விசை இல்லாமல் ஒரு பொருள் தன் நிலையில் இருந்து மாறாது. மரத்தில் இருந்து பழம் கீழே விழுவது, நீரானது ஓரிடத்தில் இருந்து தாழ்வான வேறு ஓரிடத்திற்குப் பாய்வது அனைத்தும் நிலத்தின் ஈர்ப்பு விசையாலாகும். ஈர்ப்பு விசை என்பது நிலம் தன் பால் ஒரு பொருளை இழுக்கும் அல்லது ஈர்க்கும் விசை ஆகும். எல்லாப் பொருட்களுக்கும் தன் பொருட் திணிவால், பொருட் திணிவின் அளவைப் பொருத்து ஈர்ப்பு விசை உண்டு.
†இது தவிர, மின் விசை, காந்த விசை, மற்றும் நாம் நம் கையால் ஒருபொருளை உந்தித்தள்ளும் விசை என்று ஒரு பொருளின் மீது எவ்வாறேனும் விசை செலுத்தப்படலாம், அல்லது தொழிற்படலாம்.
†விசையைப்பற்றி ஐசாக் நியூட்டன் கூறிய விதிகள் பரவலாக அறிந்தவை.
†இவ்விதிகளைக் கீழ்க்காணுமாறு கூறலாம்:
- நியூட்டனின் முதலாவது விதி: ஒரு பொருளின் மீது விசை ஏதும் த்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்.
- நியூட்டனின் இரண்டாம் விதி: ஒரு விசை ஒரு பொருளின் மீது செலுத்தும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் விரைவு முடுக்கம் அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். (முடுக்கம் என்பது நேரத்திற்கு நேரம் விரைவே மாறுபடும் விரைவுதனைக் குறிப்பது. ) முடுக்கம் = கால அடிப்படையில் விரைவு மாறும் வீதம்)
- நியூட்டனின் மூன்றாம் விதி: ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு.
இயற்பியலில் விசையின் வரைவிலக்கணம்
†இயற்பியலில் விசை என்பது நேரத்துடன் உந்தம் மாறும் வீதம் ஆகும். உந்தம் (
) என்பது பொருட் திணிவு (
) , அதன் விரைவு (
) ஆகியவற்றின் பெருக்குத் தொகை.
†இங்கு, உந்தம்
, திணிவு
வேகம்
ஆகும்.
†திணிவு m நேரத்துடன் ஒரு மாறிலி எனின், நியூட்டனின் இரண்டாம் விதி பின்வருமாறு தரப்படும்:
†இங்கு
முடுக்கம் அல்லது ஆர்முடுகல்
எனப்படும்.
விசையைக் கணக்கிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
- விசை என்பது பொருள்களுக்கிடையே ஏற்படும் செயலெதிர் செயலின் விளைவு.
- ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளைக் காட்ட வேண்டும் எனில், எந்தப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ள பொருளோடு செயலெதிர் செயலில் ஈடுபடுகின்றன என்பதை முதலில் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
- விசைகளைச் சேர்த்து வைத்தல் என்பது முடியாது; பொருள்களுக்கிடையே செயலெதிர் செயல் முடிந்தவுடன் விசை இருப்பதில்லை.
- மையநோக்கு விசை என்பது பிற விசைகளோடுகூடப் பொருளின் மீது செலுத்தப்படும் ஒரு தனிப்பட்ட விசையே இல்லை; மாறாக, சீரான நேர்த்திசைவேகத்துடன் ஒரு வட்டப்பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின்மீது செலுத்தப்படும் அனைத்து விசைகளின் தொகுவிசையே ஆகும்.
விசையின் அலகு
விசையின் அலகு நியூட்டன் (N) ஆகும். ஒரு நியூட்டன் என்பது ஒரு கிலோ கிராம் எடையுள்ள பொருளொன்றின் மீது ஒரு மீ/செக்2 முடுக்கத்தைத்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக